பட்டமங்கலம் அருகே உள்ள பி.கருங்குளம் பரநாச்சியம்மன் கோவில் தினமலர் நாளேட்டில் வெளிவந்த செய்தி:


திருப்புத்தூர் அருகே பி.கருங்குளம் பரநாச்சியம்மன் கோயிலில், உண்டியல் வைக்க சென்ற அறநிலைய துறையினர் தாக்கப்பட்டனர். இக்கோயில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் அறநிலைய துறை கட்டுப்பாட்டில் வந்தது. கோயில் கணக்குகளை ஒப்படைக்காமல் ஒரு தரப்பினர் எதிர்த்தனர். உண்டியல், பெட்டக சாவிகள் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவில்லை. இங்கு தற்போது விழா நடந்து வருகிறது. நேற்று நடந்த சிலை எடுப்பு உற்ஸவத்தில், பக்தர்கள் பணம், நகை,பட்டு சேலைகளை காணிக்கை செலுத்துவது வழக்கம். இதனால் காலை 10 மணிக்கு, அறநிலைய துறை உதவி கமிஷனர் கருப்பையா உள்ளிட்ட அதிகாரிகள் உண்டியல்களுடன் கோயிலுக்கு சென்றனர். எதிர் தரப்பினர் அங்கு ஏற்கனவே உண்டியல் வைத்திருந்தனர். அதை கைப்பற்றிய அதிகாரிகள், காணிக்கையை
வேறு உண்டியல்களுக்கு மாற்றி 'சீல்' வைத்தனர். அவற்றை எடுத்து கொண்டு வெளியே வந்த போது, பால்குட பக்தர்கள் எதிரே வந்தனர். இதனால், தள்ளு முள்ளு ஏற்பட்டது.இதில் அறநிலைய துறை ஆய்வாளர் காத்தமுத்து தாக்கப்பட்டார். அதிகாரிகளை, போலீசார் மீட்டனர்.கோயில் பூஜாரி குமார் கூறுகையில், ''எங்களது முன்னோர்கள் நீண்ட காலமாக கோயிலை பராமரித்து வருகின்றனர். அறநிலைய துறை எதுவும் செய்யவில்லை. திருவிழா நேரத்தில் உண்டியல் வைப்பதை ஏற்க முடியாது,'' என்றார்.

0 comments: